Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12274
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorUmaviny, S.-
dc.contributor.authorRajkumar, A.-
dc.date.accessioned2026-02-27T05:21:55Z-
dc.date.available2026-02-27T05:21:55Z-
dc.date.issued2025-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12274-
dc.description.abstractகட்டிளமைப் பருவத்தினர் அனுபவிக்கும் உளவியல் சார் பிரச்சினைகளில் பதகளிப்பு முக்கிய இடம் பெறுகின்றது. அவ்வகையில் கட்டிளமைப் பருவத்தினரின் பதகளிப்பிற்கு முக்கிய காரணமாக பெற்றோரிய பாணியானது காணப்படுகின்றது. அந்த வகையில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெவ்வேறு வழிகளில் வளர்க்;கின்றனர். அவ்வகையிலேயே கட்டிளமைப்பருவத்தினரின் பதகளிப்பிற்கு பெற்றோரிய பாணியின் பங்கு அதிகம் எனலாம். இவ்வாய்வு கட்டிளமைப் பருவத்தினரின் பொதுப்பதகளிப்பு மற்றும் அவர்களின் பெற்றோர்களின் பெற்றோரியப் பாணி ஆகியவற்றை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வு வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தை ஆய்வு எல்லையாகக் கொண்டுள்ளதோடு அளவுசார் விபரண ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்றவாறு ஒவ்வொரு பாடசாலைகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு அப்பாடசாலை ஒவ்வொன்றிலும் உள்ள இடைக் கட்டிளமைப்பருவ 30 மாணவர்கள் எளிய எழுமாற்று மாதிரி எடுப்பு முறை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்வுக் கருவிகளாக வினாக்கொத்துக்கள்(perceived parenting style scale> Severity Measure for generalized anxiety disorder - child age 11 to 17) ஆய்வாளரால் உருவாக்கப்பட்ட சுய தரவுப்படிவம் என்பன பயன்படுத்தப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளுடன் சமூக விஞ்ஞானங்களுக்கான புள்ளிவிபரவியல் பகுப்பாய்வு மென்பொதியைப் பயன்படுத்திப் புள்ளிவிபரவியல், சோதனைகளுக்கான சதவீதப் பகுப்பாய்வு, ஒரு மாதிரிக்கான T-பரிசீலனை, பிற்செலவுப் பகுப்பாய்வு, சுயாதீன மாதிரிகளுக்கான T-பரிசீலனை, ஒரு வழி ANOVA இணைவுப்பகுப்பாய்வு, chi-square test போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவுகளாக கட்டிளமைப் பருவத்தினர் மிதமான பதகளிப்பிற்கு உள்ளாகின்றனர்(= 12.03, p = 0.001) என்பதுடன் மாதிரிகளின் பதகளிப்புத் தொடர்பான சதவீதப் பகுப்பாய்வின் படி பதகளிப்பு காணப்படாத மற்றும் மிகக் குறைந்த பதகளிப்பு உடையவர்கள் 6.67%, குறைந்தளவிலான பதகளிப்பு உடையவர்கள் 27.78%, மிதமான பதகளிப்பு உடையவர்கள் 37.78%, கடுமையான பதகளிப்பு உடையவர்கள் 22.22%, மிகக்கடுமையான பதகளிப்புடையவர்கள் 5.56% ஆகவும் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. கட்டிளமைப் பருவத்தினரின் பெற்றோர்களின் பெற்றோரியப் பாணியில் அரவணைப்பு குழந்தை வளர்ப்புப் பாணி அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது அரவணைப்பு குழந்தை வளர்ப்பு பாணி சதவீத பகுப்பாய்வின்படி 86.67% ஆகவும் அதிகாரக் குழந்தை வளர்ப்பு பாணியானது 13.33% ஆக காணப்படுகிறது. அதனை விடக் கட்டிளமைப் பருவத்தினரின் பதகளிப்பில் அவர்களின் பெற்றோர்களின் பெற்றோரியப் பாணி செல்வாக்கு செலுத்துகின்றது. (Adjusted R2 0.042, p = 0.029). அதே நேரத்தில் கட்டிளமைப் பருவத்தினரின் பொதுப் பதகளிப்பில் பால்நிலை வேறுபாடு காணப்படவில்லை. அத்துடன் கட்டிளமை பருவத்தினரின் பெற்றோரின் பெற்றோரியப் பாணியிலும் பால்நிலை அடிப்படையிலான வேறுபாடு காணப்படவில்லை. கட்டிளமைப் பருவத்தினரின் பெற்றோரின் பெற்றோரியப் பாணியில் இன அடிப்படையிலான வேறுபாடு காணப்படுகின்றது. (தமிழர் =78.60, சிங்களவர் =88.77இ முஸ்லீம் = 82.83), (p = 0.000)). கட்டிளமைப் பருவத்தினரின் வயதிற்கும் பதகளிப்பிற்கும் இடையே தொடர்பு காணப்படவில்லை. கட்டிளமைப் பருவத்தினரின் பெற்றோரின் பெற்றோரியப் பாணியில் குடும்ப வகை அடிப்படையிலான வேறுபாடு காணப்படவில்லை. பெற்றோரின் இருப்பு நிலைக்கும் பெற்றோரியப் பாணிக்கும் இடையே தொடர்பு காணப்படவில்லை. அத்துடன் பதகளிப்பிற்கும் சகோதரர்களின் எண்ணிக்கைக்கும் இடையே தொடர்பு காணப்படவில்லை. அவ்வகையில் பிள்ளைகளின் உள ரீதியான பண்புகளில் பெற்றோரியப் பாணியின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோருக்குரிய பாணியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பெற்றோருக்கு, பாடசாலை சமூகத்திற்கு, பெற்றோர் மற்றும் பாடசாலை இணைந்து செயல்படுவதற்கு, கட்டிளமைப் பருவத்தினருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts University of Jaffna, Sri Lankaen_US
dc.subjectபதகளிப்புen_US
dc.subjectபெற்றோரியல் பாணிen_US
dc.subjectகட்டிளமைப் பருவத்தினர்en_US
dc.subjectபாடசாலைen_US
dc.titleகட்டிளமைப் பருவத்தினரின் பொதுப்பதகளிப்பும் பெற்றோரியப் பாணியும்en_US
dc.typeConference paperen_US
Appears in Collections:URSA 2025



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.