Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12140| Title: | பரராசசேகர சிரரோகநிதானத்தில் கபாலரோக சிகிச்சையில் பயன்படும் தைலங்கள் பற்றிய ஆய்வு |
| Authors: | Thayalini, T. Mayuri, S. Sri Panduranghana, R. |
| Keywords: | பரராசசேகரசிரரோகநிதானம்;தைலம்;கபாலரோகச் சிகிச்சை |
| Issue Date: | 2017 |
| Publisher: | Unit of Siddha Medicine, University of Jaffna |
| Abstract: | சித்த மருத்துவத்தில் 32 அக மருந்துகளும் 32 புற மருந்துகளும் காணப்படுகின்றன. இம் மருந்துகளின் தயாரிப்பில் மூலிகைகள். தாதுவர்க்கச் சரக்குகள். ஜீவப்பொருட்கள், உலோகங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பரராசசேகரம் எனும் நூலானது யாழ்ப்பாணத்திற்கே உரிய தட்ப வெப்ப நிலைகளிற்கேற்ப மருந்துகளை தயாரித்து அனுபவ ரீதியாகக் கை கண்டவற்றைத் தொகுத்து எழுதிய நூலாகக் காணப்படுகின்றது. இந்நூலில் கபாலரோகங்களிற்கென விதந்துரைக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகளில் தைலங்களானவை உள் மருந்தாக மட்டுமன்றி வெளி மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன இத்தைலங்களிலுள்ள பொதுவான மூலிகைகளையும், தாதுவர்க்கச் சரக்குகளையும். ஜீவப் பொருட்களையும் கண்டறிவதோடு. அவற்றின் பிரயோக முறைகளையும். தைலங்களில் பயன்படும் ஆதாரமான எண்ணெய்களையும், அத்துடன் இத்தைலங்களில் சேரும் ஏனைய திரவப் பொருட்களையும் இனங்காண்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்விலிருந்து கபாலரோகங்களில் பயன்படுத்தப்படும் 49 தைலங்களில் 317 மருத்துவப் பொருட்கள் சேர்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதில் 80.76% தாவரச்சரக்குகளில் 48.98% அதிமதுரம். 46.94% மஞ்சள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 8.20% தாதுவர்க்கச் சரக்குகளில், 22.45%கந்தகம்,16.33%கர்ப்பூரம், துருசு. துத்தம் போன்றவையும், 2.21%ஆன ஜீவச்சரக்குகளில், 12.24% புனுகுச்சட்டம். 4.08% கோரோசணை. பூநாகம் போன்றவையும் இனங்காணப்பட்டுள்ளது. இத்தைலப் பிரயோக முறைகளில், 46.94% தலையில் தேய்த்தல். பூசல், 6.12% உட்பிரயோகம். 38.78% தலைக்கு வைத்து முழுகுதல். 6.12% நசியமுறை 2.04% தலைக்கு வைத்து செவியில் விடும் முறையையும் கொண்டுள்ளது. இத்தைலங்களில் ஆதார எண்ணெயாக. 30.61% நல்லெண்ணெய், 14.29% ஆமணக்கெண்ணெய், 10.20% வேப்பெண்ணெய் சேர்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய திரவ பதார்த்தங்களாக. 20.41% கண்டில் வெண்ணெய்.16.33%பாலும். 14.22% இளநீரும் சேர்க்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி ஆய்விலிருந்து தாவரச்சரக்குகளில் அதிமதுரமும், தாதுவர்க்கச்சரக்குகளில் கந்தகமும். ஜீவப்பொருட்களில் புனுகுச்சட்டமும் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றது. தைலப்பிரயோக முறைகளில் பூசுதல். தேய்த்தல் முறையும். ஆதார எண்ணெயாக நல்லெண்ணெயும், ஏனைய திரவப் பதார்த்தங்களில் கண்டில் வெண்ணெய்யும் அதிகளவு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12140 |
| Appears in Collections: | Siddha Medicine |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| பரராசசேகர சிரரோகநிதானத்தில் கபாலரோக சிகிச்சையில் பயன்படும் தைலங்கள் பற்றிய ஆய்வு.pdf | 642.8 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.