Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12071
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorNavadharshani, K.-
dc.date.accessioned2026-01-22T08:25:39Z-
dc.date.available2026-01-22T08:25:39Z-
dc.date.issued2022-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12071-
dc.description.abstractநாடகமும் அரங்கக் கலைகளும் நீண்டகாலமாக பயிலப்பட்டுவரும் கல்வி முறைகளிலொன்று. பாரம்பரியமாக இந்தக் கல்வி குருகுல மரபு மற்றும் குலமரபு முறையில் பயிலப்பட்டு வந்தது. காலனித்துவ காலத்தில் ஏனைய கல்வி முறையில் ஏற்ப்பட்ட மாற்றங்களைப் போன்று அரங்கக் கலைகளைப் பயிலுதலிலும் மாற்றம் ஏற்ப்பட்டது. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், உயர்தரவர்க்கம் மற்றும் மத்தியதரவர்க்கம் என்பவற்றின் உருவாக்கம் இந்தக் கலைப் பயிற்சியை உள்ளடக்கியது. இது தேசியவாதத்தற்கும் பங்களித்தது. தமிழ்நாட்டில் பயில்வதற்காக நிறுவப்பட்ட கலாசேத்திரா, அடையாறு இசைக்கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் மத்தியதர வர்க்கத் தமிழர்கள் இசை, நடனம் பயில்வதற்காகச் சென்றனர். இவர்கள் கற்கையை நிறைவு செய்த பின்பு, இலங்கைக்குத் திரும்பினார்கள். இவர்கள் தனிப்பட்ட முறையிலும் கல்வி நிறுவனங்களிலும் செயன்முறை வகுப்புகளை நடாத்தத் தொடங்கினர். நாடகக் கல்வி ஏனைய அழகியற் பாடங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. நாடகம் பனுவலை அடிப்படையாகக் கொண்டு கற்கப்பட்டது. மேற்தட்டு வர்க்கத்தினர் இங்கிலாந்தில் நாடகப் பயிற்சியை பெற்று கொழும்பில் பயிற்சி நிறுவனங்களை ஆரம்பித்தனர். இதன் மூலம் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களையும் வளவாளராக உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்துள்ளனர். அரங்கக் கலைகளின் செயன்முறைப் பயிற்சிகளும் நாடகத்தயாரிப்புகளும் உருவாகுவதற்கு பங்களித்துள்ளனர். இந்த வளவாளர்கள் உள்ளூர் மற்றும் மேலைத்தேய மரபுகளை இணைத்து நாடகங்களைத் தயாரித்ததன் மூலம் தேசிய அரங்க உருவாக்கத்திற்கு பங்களித்துள்ளனர். இத்தகைய பின்னணியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கக் கலைகளும் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டபோது (1986) செயன்முறையை விடவும் கோட்பாடுகளிலும் வரலாற்றைக் கற்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. காலத்திற்குக் காலம் நாடகமும் அரங்கக் கலைகளும் கலைத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது செய்முறைப் பாடங்களின் தரம் அதிகரிக்கப்பட்டது. இந்த ஆய்வு ஆற்றுகைக் கலைகளின் கல்வியின் வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியில் அரங்கக்கலைகளின் கல்வி தொடர்பாக விவாதிப்பதோடு நாடகமும் அரங்கக் கலைகளும் கலைத்திட்டத்தையும் மீள்பார்வை செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts University of Jaffna, Sri Lankaen_US
dc.subjectநாடக அரங்கக் கலைகளின் கல்விen_US
dc.subjectநாடக அரங்கக் கலைகள் கலைத்திட்டம்en_US
dc.subjectசெயன்முறைப் பயிற்சிen_US
dc.subjectகலைத்திட்ட உருவாக்கம்en_US
dc.subjectதேசியவாதம்en_US
dc.titleஇலங்கையில் உயர்கல்வியில் ஆற்றுகைக்கலைகள்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கக்கலைகளும் கற்கைநெறி ஒரு மீள்பார்வைen_US
dc.typeConference paperen_US
Appears in Collections:2022



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.