Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12022
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorRajkumar, J.Y.-
dc.date.accessioned2026-01-16T08:05:52Z-
dc.date.available2026-01-16T08:05:52Z-
dc.date.issued2018-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12022-
dc.description.abstractகடந்த அரைநூற்றண்டுகளாக இம்மண்ணில் இயங்கி வருகின்ற திருமறைக் கலாமன்றமானது பல்வேறு கலை இலக்கியப் பணிகளையும் சமூக மேம்பாட்டுப்பணிகளையும் ஆற்றி வருகின்றது. அப்பணிகளில் ஒன்றாக இறைமகன் இயேசுவின் 'திருப்பாடுகளின் காட்சி' எனப்படுகின்ற நாடக மரபினை கடந்த 54 வருடங்களாக நிகழ்த்தி வருகின்றது. அதனை உயர்ந்த கலைப் பெறுமானத்துக்குரியதாக வளர்த்து வந்திருக்கின்ற அதே வேளையில் அப்படைப்பினை சடங்குப் பண்புகளுக்கப்பால் காலச் சூழமைவுகளுக்கமைய பல்வேறு சமூக விடுதலை பற்றியதும் மனிதத்துவ விழுமியங்கள் பற்றியதுமானதான சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் மாற்றியிருக்கின்றது. திருப்பாடுகளின் நாடக மரபினை வெறுமனே பக்தி நிகழ்வாகப் பார்ப்போர்கள் அதன் தொடர்புக் காத்திரத்தினையும் மனித நேயவெளிப்பாட்டினையும் சமகாலத்துக்கான அதன் முக்கியத்துவத்தினையும் நோக்குவதாகத் தெரியவில்லை. அதனால் இக்கட்டுரை திருப்பாடுகளின் ஆற்கைகளின் பயன் பாட்டினை ஆய்வு செய்ய முற்படுகின்றது. திருப்பாடுகளின் நாடக மரபானது மத்திய கால ஐரோப்பாவில் தோற்றம் பெற்றது. கிறிஸ்தவர்களின் தவக்காலப்பகுதியில் இயேசுவின் பாடுகள் மரணத்தினை தரிசித்து, தியானித்து மனந்திரும்புவதற்கான பக்திச்சடங்காக நிகழ்த்தப்படுவது. ஈழத்தில் ஆரம்பத்தில் பாவைகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் (உடக்குப்பாஸ்) ஆற்றுகை மரபாக காணப்பட்டது. 1952 ஆம் ஆண்டுக்குப் பின்னரே மனிதர்கள் நடிக்கின்ற நாடக மரபாக முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் மொழிபெயர்க்கப்பட்டு தமிழிலும் அறிமுகமாகியது. 1964 ஆம் ஆண்டிலிருந்து அருட்திரு நீ. மரியசேவியர் அடிகள், திருப்பாடுகளின் நாடகங்களை தமிழுக்குரியதான பிரதிகளாக புதிதாக எழுதி மேடையேற்றத் தொடங்கினார். அதனை கிரமமாக செய்வதற்காக திருமறைக் கலாமன்றம் என்ற அமைப்பினை உருவாக்கி இன்று 50 வருடங்களுக்கு மேலாக இக்கலை மரபினை மெருகேற்றி மேடையேற்றி வருகின்றார். யாழ்பாணத்தில் மட்டுமன்றி இலங்கையின் பல பாகங்களிலும் நாடு கடந்து ஐரோப்பிய நாடுகளிலும் அவரால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம் நீட்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியானது ஒரு பக்தி நிகழ்வு என்பதனை தாண்டி கலைத்துவ அம்சங்கள் அனைத்தும் நிறைந்த கலைமரபாக வளர்ச்சிபெற்றுள்ள அதே வேளையில், 'நாடகம் வாழ்வைப் பிரதிபலிக்கும் கலை' என்பதற்கொப்ப சமகால வாழ்வியலோடு இணைந்த வடிவமாகவும் வளர்ந்து வந்துள்ளது. அதனையே இக்கட்டுரை ஆய்வுசெய்கின்றது. குறிப்பாக தொண்ணூறுகளில் இருந்து திருமறைக் கலாமன்றம் சமகால விடயங்களையும் இடர்மிகுந்த போர்க்காலத்தின் சோகங்களையும் இயேசுவின் பாடுகள் மரணத்துடன் இணைத்து பல்வேறு கோணங்களில் பார்க்கின்ற புதிய நாடகங்களை எழுதியும் தயாரித்தும் மேடையேற்றி வருகின்றது. குறிப்பாக சிலுவை உலா, பலிக்கும், கல்வாரிக்கலம்பகம், கல்வாரி சுவடுகள், குருதி கழுவியஸகுவலயம், சிலுவை சுவடுகள், காவிய நாயகன் கல்வாரி யாகம் மலையில் வீழ்ந்த துளிகள் கடவுள் வடித்த கண்ணீர் வேள்வித் திருமகன் வெள்ளியில் ஞாயிறுபோன்ற பல நாடக ஆற்றுகைகளை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். கலைத்துவ ரீதியாகவும் இவ்வடிவம் உலகத் தரத்தினை நோக்கிய அரங்க வடிவமாக மாறி வருகின்றது. எனவே இச்செயற்பாடுகள் முறையான ஆய்வுக்குட்படுத்தப்படுவதும், அவற்றின் பயன்கள் ஆராயப்படுவதம். இக்கலைமரபினது தாக்கவன்மை உணர்த்தப்படுவதும் எதிர்கால சமூகத்திற்கு பயன்மிக்கதாக அமையும். திருமறைக்கலாமன்றத்தின் தொண்ணூறுகளுக்குப் பின்னான திருப்பாடுகளின் ஆற்றுகைகளை ஆய்வு செய்கின்ற போது கடந்த முப்பது வருட போர்க்காலத்தில் குறிப்பாக இருபது வருடத்திற்கு மேற்பட்ட இன்னல்கள் மிகுந்த காலத்தில், போர், உயிரிழப்புக்கள், அச்சம் நிறைந்த வாழ்வு, உடமை இழப்புக்கள், இடப்பெயர்வுகள், அங்கவினம், அகதி வாழ்வு, என்ற சொல்லொணா துயர்மிகுந்த போராட்ட வாழ்வின் சூழமையில் திருமறைக் கலாமன்றம் மேற்கொண்ட திருப்பாடுகளின் நாடகங்கள் தனியே இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பு என்ற சடங்கு வழி சுரங்களாக மட்டும். இல்லாது மனிதத்துவத்தின் துயர்களை எடுத்துச் சொல்லும் ஊடகமாகவும் அவற்றினை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து தொடர்புபடுத்தி ஆற்றுப்படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. போர்க்காலத்தில் மக்கள் அனுபவித்த துயரத்தில் அவர்களை ஆற்றுப்படுத்தும் பணியாகவும், உண்மைக்கு குரல் கொடுப்பதாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாகவும், பிறரன்பு, தியாகம், போன்றவற்றின் பெறுமதியை உணர்த்தியும், மனித உரிமைகள் குறிப்பாக பெண்ணுரிமை, சிறுவர் உரிமை போன்ற மனிதநேயத்தின் கூறுகளை வலியுறுத்தியும் வந்துள்ளது. இதனை பல பத்திரிகை விமர்சனங்களில் இருந்து அறியக் கூடியதாகவுள்ளது. அதனால் கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி பிறசமய சகோதரர்களும் இந் நாடகங்களுக்கு விரும்பி வந்து பார்வையிடும் பாரம்பரியம் உருவாகியுள்ளது. எனவே கிறிஸ்தவர்களின் சடங்காகவும் கலைமரபாகவும் காணப்படுகின்ற திருப்பாடுகளின் நாடகங்கள் சமூக நடவடிக்கையாகவும் ஆற்றுப்படுத்தும் ஊடகமாகவும் பயன்படமுடியும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அந் நாடகங்களுக்கூடாக இறைமகன் இயோ வாழ்ந்து வெளிப்படுத்திய மனிதநேய பண்புகளை தாக்கவள்மையுள்ள நிகழ்த்திக்காட்டலூடாக வெளிப்படுத்தி, காலத்துக்கு ஏற்ற வகையில் அதனை சிந்திப்பதற்கும். ஒப்பு நோக்குவதற்கும் செய்துள்ளது. சமகால மனிதரில் வளர்க்கப்பட வேண்டிய பிறரன்பு, தியாகம் உண்மைக்காக குரல் கொடுத்தல், விழிம்பு நிலை மக்களுக்கு உதவுதல், துயருறுவோரை ஆற்றுப்படுத்துதல், பெண்கள் சிறுவர்களில் விசேட தலனம் கொள்ளுதல் என பல்வேறுபட்ட விடயங்களையும் வலுப்படுத்தி புதியதோர் கிறிஸ்தவ மனித நேயப்பணியாட்டை நோக்கிச் செல்வதற்கும் வழிகாட்டி உள்ளது. அது சமயங் கடந்தும் வரவேற்கப்படுவதானது அதன் பயனை மேலும் அதிகரித்துள்ளது.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of jaffnaen_US
dc.subjectஉடக்குப்பாஸ்en_US
dc.subjectமனித உரிமைகள்en_US
dc.subjectபாரம்பரியம்en_US
dc.subjectஅரங்க வடிவம்en_US
dc.titleமனித நேய பண்புகளை பிரதிபலிக்கும் திருமறைக்கலாமன்றத்தின் திருப்பாடுகளின் ஆற்றுகைகள்en_US
dc.typeConference paperen_US
Appears in Collections:2018



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.