Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11912
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorMary delcia, A.C.-
dc.date.accessioned2025-12-22T03:05:38Z-
dc.date.available2025-12-22T03:05:38Z-
dc.date.issued2024-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11912-
dc.description.abstractபொதுவெளி இறையியல் என்பது சமயம் மற்றும் பொதுவாழ்க்கையின் குறுக்கு வெட்டுக்களை விமர்சன ரீதியாக ஆராயும் கிறிஸ்தவ இறையியலின் ஒரு பிரிவாகும். இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு பொதுவெளி இறையியல் சார் எண்ணக்கரு வரலாறு என்பனவற்றின் பொருத்தப்பாட்டினை ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். வரலாற்று ரீதியான ஆவணங்கள் மற்றும் உள்ளடக்க பகுப்பாய்வுகள் என்பவற்றின் மூலமாகத் திரட்டப்பட்ட தரவுகள் என்பவற்றைக் கொண்டு பண்பு சார் ஆய்வு முறையியலில் இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது. பொதுவெளி இறையியலானது நீதி அமைதி மனித உரிமைகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலின் நிலைபேறான தன்மை ஆகிய பிரச்சினைகளை தீர்க்க முயல்வதனூடாக பொதுவெளியில் இறையியியலின் பிரதிபலிப்பு மற்றும் பொது வாழ்க்கையின் நடைமுறை உண்மைகள் ஆகியனவற்றிற்கு இடையிலான இடைவெளியினைக் குறைப்பதற்கு முயல்கின்றது. ஆசியாவிலுள்ள பொதுவெளி இறையியலானது குறித்த பிராந்தியத்தின் தனித்துவமான கலாசார சமய மற்றும் அரசியல் பின்னணிகளினால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் ஆசிய இறையியலாளர்கள் பூர்வீக மரபுகள் விடுதலை இறையியல் பெண்ணிய இறையியல் மற்றும் பண்பாட்டு இறையியல் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது தனித்துவமான அணுகுமுறைகளை உருவாக்கியுள்ளார்கள். ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை உரிய முறையில் கையாளுவதற்கு இது ஒரு மதிப்பு மிக்க கருவியாக காணப்படுகின்ற போதிலும் இக்கோட்பாடானது மேற்கத்தைய சூழலில் வளர்ந்த கருத்து என்பதனால் இதனை ஆசியாவின் கலாசார மற்றும் அரசியல் யதார்த்ததங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பது முக்கியமாகின்றது. சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் அநீதியை எதிர்த்தல் சமய உணர்வுகளை வழிச்செலுத்துதல் கோட்பாட்டு நடைமுறையை சமநிலைப்படுத்துதல் சமூக ஈடுபாடு மற்றும் சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துதல் ஊhடான சமூக மாற்றத்தை உருவாக்குதல் என்பன இதனால் எதிர்பார்க்கப்படுகின்றன. இவ்வாறாக குழப்பவியல் வாதம் பௌத்தவியல் வாதம் இந்துவியல் வாதம் மற்றும் பல்கிறிஸ்தவ சபைகளின் ஊடாட்டம் போன்ற சமூகப் பொருத்தத்துடன் கூடிய ஆசிய இறையியல் மரபுகள் சார் நீண்ட கால பிரச்சினைகள் தீர்த்தல்இ ஆசியாவில் விரைவாக வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் எதிர்நோக்கும் உலகமயமாக்கம் மற்றும் நகரமயமாக்கம் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தல் போன்ற பல்வேறுபட்ட வழிகளில் பொதுவெளி இறையியலானது 21 ஆம் நூற்றாண்டில் இலங்கை அனுபவித்துவரும் பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ளுவதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. காலநிலை மாற்றம் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அரசியல் உறுதியற்ற தன்மை பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் சுகாதார பிரச்சினைகள் போன்ற புதிய சவால்களை உலகம் எதிர்கொள்வதால் பொதுவெளி இறையியலாளர்கள் கிறிஸ்தவ முன்னோக்குகளை வழங்குவதிலும் பொதுநலனுக்காக வாதிடுவதிலும் தொடர்ந்து முக்கியபங்கு வகிப்பார்கள். சமயம் மற்றும் சமய சார்பற்ற உரையாடல்களை வளர்ப்பதன் மூலம் இது ஆசியாவில் குறிப்பாக இலங்கையில் மிகவும் நியாயமானதும் சமமானதும் நிலையானதுமான எதிர்காலத்தைப் பின்தொடர்வதில் பங்களிக்க முடியும்.en_US
dc.language.isoenen_US
dc.publisherUniversity of jaffnaen_US
dc.subjectபொதுவெளி இறையியல்en_US
dc.subjectஎண்ணக்கருen_US
dc.subjectவரலாறுen_US
dc.subjectஆசியாen_US
dc.subjectஇலங்கைen_US
dc.titleசவால்மிக்க காலங்களும் ஆசியாவில் பொதுவெளி இறையியலின் பொருத்தப்பாடும்: இலங்கையை மையப்படுத்திய ஒரு நோக்குen_US
dc.typeConference paperen_US
Appears in Collections:2024

Files in This Item:
File Description SizeFormat 
ஆசியாவில் பொதுவெளி இறையியலின்.pdf212.46 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.