Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11465
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorVisakaruban, M.-
dc.contributor.authorPoologanathan, P.-
dc.date.accessioned2025-08-15T05:35:33Z-
dc.date.available2025-08-15T05:35:33Z-
dc.date.issued2021-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11465-
dc.description.abstractநூலகங்கள் தனக்குரிய தகவல் சாதனங்களைச் சேகரித்தலிலும், அதனைச் சீரான முறையில் ஒழுங்கமைத்தலிலும் அதிக கவனம் செலுத்துகின்றன. நூலக தகவல் சாதனங்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்பு மூலமே அதனைச் சரியான முறையில் பயன்படுத்த முடியும். நூலகங்களில்தகவல் சாதனங்கள் சரியான முறையில் பகுப்பாக்கம் செய்யப்படவில்லை எனின் தகவல் வளங்களை அணுகுவதிலும் மீட்டெடுப்பதிலும் சிரமங்கள் எதிர்நோக்கப்படலாம். நூலகங்களில் தகவல் சாதன ஒழுங்கமைப்பிற்கான விதிமுறைகளைக் குறிப்பிடும் கருவி நூல்கள் பல பயன்பாட்டில் உள்ள போதிலும் பெரும்பாலும் இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் தூயி தசம பகுப்பாக்க திட்டத்தின் 23ம் பதிப்பு பயன்படுத்தப்படுகிறது. (Dewey Decimal Classification – 23rd Edition) இங்கு ஒவ்வொரு பாடநெறிகளுக்குமாக 000 - 999 வரையிலான எண்கள் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் மெய்யியல் பாடவிதானம் சார்ந்த நூல்கள் 100-199 எனும் பகுதியில் விளக்கப்படுகிறது. இவ்வாறு தூயி தசம அடிப்படையில் 100-199 வரையிலான மெய்யியல்சார் நூல்களைப் பகுப்பாக்கம் செய்கையில் சில தெளிவின்மை காணப்படுகின்றன. குறிப்பாக, குறித்த ஓரிடத்தில் இறாக்கைப்படுத்துவதற்காகக் குறிப்பிடப்படும் தகவல் சாதனங்கள் மற்றுமொரு இடத்திலும் இறாக்கைப்படுத்துவதற்கு ஏதுவான முறையில் நெகிழ்ச்சித் தன்மை DDC யில் காணப்படுகிறது. எனவே இவ்வாய்வானது இவ்வாறான தெளிவில்லாத சந்தர்ப்பங்களை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் இவ்வாறான தகவல் சாதனங்களை நூலகத்தில் எந்தஇடத்தில் இறாக்கைப்படுத்துவதனூடாக சரியான பயனை மெய்யியல் துறைசார்ந்த வாசகர் பெறமுடியும் என்பதனைத் தெளிவுபடுத்திக் காட்டுவதாகவும் இவ்வாய்வு அமைகிறது. இவ்வாய்வுக்காகப் பகுப்பாய்வு முறை, விபரண முறையியல் மற்றும் ஒப்பீட்டாய்வு முறை என்பன பயன்படுத்தப்படுவதுடன் இவ்வாய்வுக்கு வேண்டிய தரவுகள் யாவும் முதன்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளாகப் பெறப்பட்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகிறது.en_US
dc.language.isootheren_US
dc.publisherSri Lanka Library Associationen_US
dc.subjectதகவல்சாதனம்en_US
dc.subjectதூயிதசம பகுப்பாக்கம்en_US
dc.subjectமெய்யியல் பாட விதானம்en_US
dc.subjectநூலக பகுப்பாக்கம்en_US
dc.subjectஇறாக்கைப்படுத்தல்en_US
dc.titleதூயி தசம பகுப்பாக்க அடிப்படையில் மெய்யியல் பாடவிதான நூல்களை ஒழுங்கமைத்தல் பற்றியதோர் பகுப்பாய்வுen_US
dc.typeJournal full texten_US
Appears in Collections:Research Publication - Library



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.