Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11226
Title: | முல்லைத்தீவு கல்விவலயப் பாடசாலை ஆசிரியர்களிடையே வகுப்பறை முகாமைத்துவத் திறன்கள் |
Authors: | Premalatha, A. |
Keywords: | வளங்கள்;வளக்கிடைப்பனவு;வளப்பயன்பாடு;ஆசிரியமுகாமையாளர்;வினைத்திறன்;உள அழுத்தம் சிந்தனைப் போக்குகள் |
Issue Date: | 2024 |
Publisher: | University of Jaffna |
Abstract: | கல்வியைக் காத்திரமாக வழங்கும் பாடசாலைகளின் இலக்கை அடைந்து கொள்வதற்கு வகுப்பறை முகாமைத்துவத் திறன் விருத்தி அவசியமாகும். மனித பௌதிக வள மேம்பாட்டோடு நிறுவனத்தை சீர் செய்துகொள்வது முகாமைத்துவமாகும். இவ் ஆய்வில் பிரச்சினைகளை இனங்கண்டு பிரச்சினைகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளைக் கண்டறிந்து இவற்றிலிருந்து விடுபட்டு எவ்வாறு மேம்பாடடையவைக்கலாம் என்பது குறிக்கோளாக உள்ளது. முல்லைத்தீவு கல்வி வலயத்தில் முகாமைத்துவத் திறன் விருத்திக்காக 35 பாடசாலைகளில் 196 பேர் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டு ஆவணத் தகவல்கள், வினாக்கொத்து, நேர்காணல், குவியமையக் கலந்துரையாடல் என்பவற்றின் மூலம் தரவுகள் திரட்டப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்டறிதல் களாக அதிபர் ஆசிரியர்களுக்கு பொருத்தமான வழிகாட்டல்கள் போதுமானதாக இல்லை. பொருத்தமான ஆளணிவளம் குறைவாக உள்ளமை, பௌதிக வளம் போதுமானதாக இல்லை, விழிப்புணர்வின்மை என்பன இனங்காணப்பட்டன. இவற்றை நிவர்த்தி செய்து எதிர்கால ஆய்வுவினாக்களுக்காக நிபுணத்துவவிழிப்புணர்வு, பௌதிகவளங்கள், தொடருறு பயிற்சிகள் வேலைப்பகிர்வு, ஆசிரியர் கூட்டங்கள் என்பனவற்றைப் போதுமானளவு மேற்கௌ;ள வேண்டும். |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11226 |
Appears in Collections: | 2024 January Vol XXI Issue 01 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
முல்லைத்தீவு கல்விவலயப் பாடசாலை ஆசிரியர்களிடையே வகுப்பறை முகாமைத்துவத் திறன்கள்.pdf | 843.81 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.