Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11225
Title: | அகோரசிவாசாரியார் நோக்கில் அபரக்கிரியைகள் - மரபும் மாற்றமும் |
Authors: | Krishnamoorthy Iyar, T. |
Keywords: | சைவசமயம்;அபரக் கிரியை;அகோரசிவாசாரியார்;அந்தியேட்டி;பத்ததி |
Issue Date: | 2024 |
Publisher: | University of Jaffna |
Abstract: | சைவசமயத்தில் கிரியைகள் இன்றியமையாத இடத்தினைப் பெற்று விளங்குகின்றன. அவை கோயிற் கிரியைகள், பூர்வக்கிரியைகள், அபரக்கிரியைகள் எனப் பல வகைப்படுவன. கிரியைகள் யாவும் ஞானம் கிடைத்தற்காகவே செய்யப்படுகின்றன என சைவசித்தாந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. விதிகளைப் பிரமாணமாகக்கொண்டு கிரியைகள் செய்யும் முறையினை முறையாகக் கூறும் நூல்களாகப் பதினெண் பத்ததிகள் விளங்குகின்றன. இதனடிப்படையில் இறந்தவருக்குச் செய்யப்படுகின்ற அபரக்கிரியைகளானவை இறந்த உயிருக்கு ஆன்ம ஈடேற்றத்தோடு ஞானத்தை உண்டாக்கி அவரின் ஆன்மிக விடுதலைக்காகச் செய்யப்படுகின்றன. இதற்கு அகோரசிவாச்சாரியார் தனது கிரியா கிரம யோதிகா பத்ததியில் அபரக்கிரியைகள் பற்றிப் பல விளக்கங்களைத் தெளிவாக விபரித்துள்ளார். பதினெண் பத்ததிகளுள் அகோரசிவாச்சாரியார் பத்ததியே உரை விளக்கத்துடன் ஆக்கப்பட்டதாகும். அபரக்கிரியைகள் சைவசித்தாந்தத் தெளிவோடு நடைபெறுகின்றன. அபரக்கிரியைகளுள் பேரிதாடனம், சூர்ணோற்சவம், அந்தியேட்டி, அஸ்திசஞ்சயனம், பாஷாணஸ்தாபனம், ஏகோதிட்டம், மாசிகம், சோதகும்ப சிரார்த்தம், சபிண்டீகரணம், சிரார்த்தம் போன்றவை அடிப்படையாக உள்ளன. அவற்றையே இன்றுவரை பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன. ஆயினும் அவற்றுள்ளும் காலச் சூழமைவு, தேசவழமை, பொருளாதார வசதிப்பாடு, வேறுசில பத்ததிக்கலப்பு ஆகிய காரணிகளால் அபரக் கிரியைகள் செய்வதில் மாற்றங்கள் காணப்படுகின்றன. அவற்றை இக்கட்டுரை ஆராய்வதாக அமைகின்றது. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11225 |
Appears in Collections: | 2024 January Vol XXI Issue 01 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
அகோரசிவாசாரியார் நோக்கில் அபரக்கிரியைகள் - மரபும் மாற்றமும்.pdf | 596.95 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.