Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10978
Title: | நூல்தேட்டம்: ஈழத்தமிழர்களுக்கான தேசிய நூற்பட்டியல் |
Authors: | Selvaraja, N. |
Keywords: | நூல்தேட்டம்;நூல்விபரப்பட்டியல்;ஈழத்தமிழர்வெளியீடுகள் |
Issue Date: | 2024 |
Publisher: | University of Jaffna |
Abstract: | நூல்விபரப்பட்டியல் என்பது எழுதப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட ஆவணங்களுடைய விபரங்கள் அடங்கிய பட்டியல்களை முறையான ஒழுங்கமைப்பில் தயாரிக்கும் செயற்பாடாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், இலங்கையின் தேசிய நூற்பட்டியல் சிங்கள, தமிழ், ஆங்கில ஆவணங்களுக்கான நூல்விபரப்பட்டியலாக இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் வெளியிடப்பட்டுவருகின்றது.இத்தேசியநூற்பட்டியலில்இலங்கையில்வெளியிடப்படும்அனைத்துதமிழ் நூல்களும் உள்வாங்கப்படுவதில்லை எனும் விமர்சனமும் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும், அமரர்களான சைமன் காசிச்செட்டி, குரும்பசிட்டி கனக செந்திநாதன், எப்.எக்ஸ்.சீ.நடராஜா, சில்லையூர் செல்வராசன், வரதர் என்ற தி.ச.வரதராஜன் ஆகியோரின் ஆக்க இலக்கியத் துறைசார் நூற்பட்டியல்களே இன்றுவரை ஈழத்து இலக்கிய ஆய்வாளர்களால் தமது ஆய்வுகளில் குறிப்பிடப் படுகின்றன. இத்தகைய சூழலில், ஈழத்தமிழ் நூல்களுக்கான தனியானதொரு தேசிய நூற்பட்டியலின் தேவை நீண்டகாலமாகவே தமிழ் ஆய்வாளர்கள் மத்தியில் உணரப்பட்டு வந்துள்ளமையை காணக் கூடியதாகஉள்ளது. 'நூல்தேட்டம்' எனும் வெளியீடானது, இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வெளியிடப்பட்ட ஈழத்து தமிழ் ஆவணங்களின் விபரங்களை உள்ளடக்கிய ஒரு நூல்விபரப்பட்டியலாக கடந்த 22 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகின்றது. வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ் நூல்கள் அனைத்தையும், ஒரு தொகுதிக்கு 1000நூல்கள்என்றஎண்ணிக்கையில்பட்டியலிடுவதேநூல்தேட்டத்தின்அடிப்படைநோக்கமாகும். |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10978 |
Appears in Collections: | ETAKAM 2024 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
நூல்தேட்டம் ஈழத்தமிழர்களுக்கான தேசிய நூற்பட்டியல்.pdf | 108.3 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.