Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10977
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Thanuja, S. | - |
dc.contributor.author | Jeyaseelan, R. | - |
dc.contributor.author | Kupeshan, R. | - |
dc.contributor.author | Chandrasekar, K. | - |
dc.date.accessioned | 2025-01-15T02:56:15Z | - |
dc.date.available | 2025-01-15T02:56:15Z | - |
dc.date.issued | 2024 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10977 | - |
dc.description.abstract | மனிதன் அறிவை பகிர்ந்து கொள்வதற்கு காகிதங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, பதப்படுத்தப்பட்ட களிமண், கல், உலோகங்கள், மரங்களின் இலை, பட்டை மற்றும் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் என்பன எழுதுகருவிகளாக பயன்படுத்தப்பட்டன. இலங்கை வரலாற்றில், பண்டைக் காலங்களில் அறிவை பகிர்ந்து கொள்வதற்கு களிமண் தகடுகள், கற்தூண்கள், உலோகத் தகடுகள்;, ஓலைச்சுவடிகள் என்பன எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் காகிதப்பாவனையின் வருகையோடு, ஏடெழுதும் பழக்கம் அருகிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டளவில்அச்சுதொழில்நுட்பத்தின்உதவியுடன்ஓலைச்சுவடிகளில்இருந்ததகவல்நூல்களாக அச்சில் பதிப்பிக்கப்பட்டன. எனினும், ஓலைச்சுவடிகளில் காணப்பட்ட அனைத்து தகவல்களும் அச்சில் வரவில்லை. அத்துடன், ஓலைச்சுவடிகளின் பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பிலும் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை. இதனால், இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் இருந்த ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை சில ஆயிரங்களாக குறைந்து விட்டன. மேலும், இயற்கை அனர்த்தங்களினாலும், காலநிலை மாற்றத்தினாலும், உயிரியல் காரணிகளினாலும், இனக்கலவரங்களினாலும், மற்றும் இராசயன பாவனையினாலும் ஓலைச்சுவடிகள்; அழிவடைந்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனவே, பல்வேறு இடங்களிலும் சிதறிக்கிடக்கும் எஞ்சியுள்ள ஓலைச்சுவடிகளை யேனும் சேகரித்துப் பாதுகாத்தலும், அவற்றின் உள்ளடக்கத்தை உரியமுறையில் ஆவணப்படுத்தி எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்குவதும் அவசியமாகும். அந்த வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நூலகமானது 'கந்தையா' கார்த்திகேசன்;; நம்பிக்கை நிதியத்தின்' நிதி உதவியின் கீழ் நூலகத்தில் காணப்படுகின்ற ஓலைச்சுவடிகளைப் பாதிக்கும் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றின் பாதுகாப்புத் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய செயற்றிட்டம் ஒன்றை 2020இல் ஆரம்பித்திருந்தது. இச்செயற்றிட்டத்தின் மூலம் ஓலைச்சுவடிகளில் சிதைவை ஏற்படுத்து கின்ற காரணிகளை கண்டறிதலும், ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதற்குப் பொருத்தமான பாரம்பரிய, உயிரியல், மற்றும் இரசாயன வழிமுறைகளை இனங்காண்பதும் முக்கிய நோக்கங்களாக அமைந் திருந்தன. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | ஓலைச்சுவடிகள் | en_US |
dc.subject | ஆவணப்பாதுகாப்பு | en_US |
dc.subject | யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் | en_US |
dc.title | ஓலைச்சுவடிகளைப் பாதிக்கும் காரணிகளைக் கண்டறிதலும், மூலப்பிரதிகளைப் பாதுகாத்தலும் | en_US |
dc.type | Conference paper | en_US |
Appears in Collections: | ETAKAM 2024 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
ஓலைச்சுவடிகளைப் பாதிக்கும் காரணிகளைக் கண்டறிதலும், மூலப்பிரதிகளைப் பாதுகாத்தலும்.pdf | 107.06 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.