Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10305
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorAniththa, S.-
dc.date.accessioned2024-03-25T08:00:50Z-
dc.date.available2024-03-25T08:00:50Z-
dc.date.issued2023-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10305-
dc.description.abstractஇலங்கையின் சமூகக் கட்டமைப்பில் ஆதிகாலம் தொட்டு தற்காலம் வரை பெண்களின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது. அவர்கள் தாய், மனைவி, மகள் என்ற நிலையில் சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் சிலர் அரசியல், பொருளாதார, சமய நடவடிக்கைகளிலும், பொதுநலன்களிலும் ஈடுபட்டிருந்தனர். இலங்கை வரலாற்றில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் நாட்டை ஆட்சி செய்வது, பகைவருடன் போரிடல், இயற்கை அனர்த்தத்தில் இருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாத்தல், சமயத்திற்காகப் பணி செய்தல் என்பவற்றால் இடம்பிடித்தனர். இருப்பினும் இலங்கை வரலாறு கூறும் மூலாதாரங்களில் அரசர்கள், அதிகாரிகள், படைவீரர்கள், வணிகர்கள், பிக்குகள் போன்ற ஆண் சமூகத்தினர் ஆற்றிய பணிகளே பெருமளவுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பெண்கள் பற்றிய குறிப்புக்களும் அவர்களுடைய பங்களிப்புக்களும், சாதனைகளும் மிகக்குறைவாகவே உள்ளன. இதனால் இலக்கிய, கல்வெட்டுச் சான்றாதாரங்களிலே ஆங்காங்கே வரும் செய்திகளின் ஊடாக இக்கால இலங்கைச் சமுதாய அமைப்பில் பெண்கள் சொத்துரிமை பெற்றவர்களாக இருந்ததோடு தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தோடு இணைந்தும் தானங்கள் வழங்கியிருந்தனர் என்பதை எடுத்துக்காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வுக்காக முதலாந்தர மூலாதாரங்களாக பாளி, சிங்கள இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்களும், இரண்டாந்தர மூலாதாரங்களாக இலங்கை வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்களது நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் இணையத்தளக் கட்டுரைகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று அணுகுமுறையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வதாக இவ்வாய்வு உள்ளது. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் உயர் அந்தஸ்துடைய பெண்கள் வழங்கிய தானங்கள் பற்றிய செய்திகளே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பாளி, சிங்கள இலக்கியங்களில் சாதாரண பெண்கள் சிலர் தனியாகவோ, கணவருடனோ தந்தையுடனோ கூட்டாக இணைந்து தானம் கொடுத்தமை பற்றிய செய்திகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றினூடாக அரச குடும்பத்துப் பெண்கள், பிராமணப் பெண்கள், பௌத்த பெண் துறவிகள், வணிகர்கள் படைவீரர்களின் மனைவிகள், பாமரப் பெண்கள் போன்றோர் தானங்களாக கிராமங்கள், நிலங்கள், குகைகள், ஆபரணங்கள், ஆடைகள், உணவு, நீர்த்தொட்டிகள், செங்கற்கட்டிகள், திருநந்தா விளக்குகள், மடாலய உதவியாளர்கள், மடங்கள், வருமானம், காசு போன்றவற்றை இந்து, பௌத்த நிறுவனங்களுக்கும், சமயக்குருமார்களுக்கும் தானங்களாக வழங்கியுள்ளதைக் காணமுடிகிறது. இதனால் இக்காலப் பெண்கள் பெரும்பாலும் ஆண்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சொத்துரிமை, வேலைசெய்யும் உரிமை, மதச்சுதந்திரம், ஆன்மீகப்பற்று என்பற்றைக் கொண்டு சுதந்திரமான முறையில் வாழ்ந்திருந்தார்கள் என்பது அறியக்கிடக்கிறது. அரசியல் துறையில் அதிகாரத்தை தக்க வைப்பதில் பெரிதளவு வெற்றியைப் பெறாவிட்டாலும் இவர்கள் வழங்கிய தானங்கள் மதப்பற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Kelaniyaen_US
dc.subjectஇலங்கைen_US
dc.subjectபெண்கள்en_US
dc.subjectதானம்en_US
dc.subjectகல்வெட்டுக்கள்en_US
dc.subjectஇலக்கியங்கள்en_US
dc.titleஇலக்கிய, கல்வெட்டுச் சான்றாதாரங்கள் கூறும் பெண்களின் தான செய்திகள்: கி.பி. 13ஆம் நூற்றாண்டு காலம் வரையான இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுen_US
dc.typeConference paperen_US
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.