Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10277
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Theepan, P. | - |
dc.contributor.author | Ramanaraja, S. | - |
dc.date.accessioned | 2024-03-22T06:32:38Z | - |
dc.date.available | 2024-03-22T06:32:38Z | - |
dc.date.issued | 2024 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10277 | - |
dc.description.abstract | குறித்த ஒரு இனக்குழுவானது காலங்காலமாக தன்னடையாளமாகப் பேணிவரும் விடயங்களும் பொருட்களும் 'மரபு' எனும் வகைப்பாட்டினுள் உள்ளடங்குகின்றன. இலங்கையின் வட பிராந்தியத்திலுள்ள யாழ்ப்பாணத்தின் ஒரு பிரதேசமே வட்டுக்கோட்டை. காலணித்துவ காலத்தில் வடபிராந்தியத்தில் அமைக்கப்பட்ட முதற் கல்லூரி (1823) இப்ட பிரதேசத்திலே அமைக்கப்பட்டு கிறிஸ்தவ, ஆங்கில வாழ்க்கை முறை பிரசாரப்படுத்தப்பட்டது. ஆரச உத்தியோகமும் புதிய மத்திய தர வர்க்க உருவாக்கமும் வெகுவாக பரவலாக்கமுற்றன. இங்கு தொன்மைக் காலந்தொட்டு நிலைபெற்றிருந்த சைவமும் தமிழும் தமிழர்தம் கலை மரபும் ஒடுக்குமுறைக்குள்ளாகின. பின்காலனிய காலமாகிய இன்று அங்கு இருக்கின்ற சைவத்தின் ஆலயங்கள், வழிபாடுகள், கலைகள் என்பவற்றில் காணப்படுகின்ற மரபார்ந்த தன்மைகள் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள் என்பன இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. வுட்டுக்கோட்டைப் பிராந்தியத்தின் பெயருருவாக்கம், சமூக, சமய பன்மைத்துவம் இங்கு காணப்படுகின்ற சைவாலயங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. ஐசவாலயங்களாவன கிராமிய ஆலயங்கள், மேனிலையாக்கம் பெற்ற ஆகமக் கோயில்கள், இருமரபும் ஒருங்கே துய்க்கப்பெற்ற ஆலயங்கள் என மூவகைத் தன்மையுடையவையாகக் காணப்படுகின்றன. கிராமியக் கோவில்கள் தவிர்ந்த இருமரபுக் கோயில்களும் கட்டடம், சிற்பம், ஓவியம் போன்ற கலைகளை உடையனவாகவும் திகழ்கின்றன. கூத்துக்கள் நடைபெற்றுள்ளன. இக்கலை மரபுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்த ஆய்வு முதன்மைப்படுத்தி கவனத்தில் கொள்கின்றது. இக் கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு மரபுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், மரபார்ந்த தன்மைகளையும் பிரித்தறிந்து அவற்றுக்கான பின்னணியை ஆய்வுக்குட்படுத்துகின்றது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | ஐசவாலயங்கள் | en_US |
dc.subject | மரபு | en_US |
dc.subject | மாற்றம் | en_US |
dc.subject | வழிபாடு | en_US |
dc.subject | கலை | en_US |
dc.title | சமகால செல்நெறியில் இந்து ஆலய வழிபாட்டு மரபும் மாற்றமும் - வட்டுக்கோட்டைப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு | en_US |
dc.type | Conference paper | en_US |
Appears in Collections: | URSA 2024 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
சமகால செல்நெறியில் இந்து ஆலய வழிபாட்டு மரபும் மாற்றமும்.pdf | 751.34 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.